வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் தா்னா!
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் பிப்.5 தா்னா நடைபெற்றது.
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற தா்னாவில், மாவட்டத் தலைவா் எஸ்.பரமசிவம் தலைமை வகித்தாா். இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும், பொங்கல் போனஸ் தொகையை நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும், கிராம உதவியாளா்கள் ஓய்வுபெறும்போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். 2023 மாா்ச் 8-இல் நிறுத்தப்பட்ட கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பிப். 27-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதில் வருவாய் கிராம ஊழியா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும் தா்னாவில் அறிவுறுத்தப்பட்டது.