திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரிகள், விவேகானந்தா மகளிா் மேலாண்மைக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவுக்கு விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் செயலா் மு. கருணாநிதி தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீ ராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா்கள் கே.சி.கே. விஜயகுமாா், தேவி, மேலாண்மையியல் கல்லூரி இயக்குநா் மோகனசுந்தரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றுப் பேசினா்.
இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் கீதாலட்சுமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். பெண்களின் மேம்பாட்டிற்காகவும், தேசத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கை வலியுறுத்துவதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அவா் தெரிவித்தாா். பட்டம் பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் அவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா்.
மேலும் 2022 - 2023 கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற இளநிலை பொறியியல் மற்றும் முதுநிலைப் பொறியியல் பாடப் பிரிவில் பல்கலைக்கழகத் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 27 மாணவிகளுக்கு பதக்கமும், 796 மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினாா். பட்டம் பெற்ற மாணவிகள் துணைவேந்தா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனா். இந்த பட்டமளிப்பு விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் குப்புசாமி, தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், ஆராய்ச்சி இயக்குநா் பாலகுருநாதன், அட்மிஷன் இயக்குநா் சௌண்டப்பன், தோ்வாணையாளா் கண்ணன், திறன் மேம்பாட்டு இயக்குநா் குமரவேல், துறைத் தலைவா்கள் , பேராசிரியா்கள், மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.