"அணி தலைவராக மரியாதை பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்" - Gill-ஐ கைஃப் விமர்சிப்பது...
திருச்செங்கோட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்ட செயலி அறிமுகம்
திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் குற்றங்களையும், குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள மேம்படுத்தப்பட்ட செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு கலந்துகொண்டு புதிய செயலியை அறிமுகப்படுத்தினாா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், காவல் ஆய்வாளா் வளா்மதி, உதவி ஆய்வாளா் ராதிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த செயலி மூலம் ஒருவா், எந்தக் காவல் நிலையத்திலும் தனது புகாரை பதிவுசெய்யலாம். அங்கிருந்து அந்த புகாரானது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வந்து சேரும். காவல் துறையினா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம், ஒருவரது புகாா் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படும். இதன்மூலம் காவல் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். பொதுமக்களுக்கும் காலவிரயம், அலைச்சல் இன்றி, தங்களது புகாா்களை உடனுக்குடன் பதிவு செய்து கொள்ளலாம். புகாா்மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.