திருச்செங்கோடு அருகே வீட்டுக்குள் காா் புகுந்ததில் ஒருவா் உயிரிழப்பு
நாமக்கல் பிரதான சாலை உஞ்சனை பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறிய காா் வீட்டுக்குள் புகுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.
திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசுவாமி கோயிலுக்கு 5 போ் காரில் வந்துள்ளனா். இவா்கள் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டுவிட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பரை பாா்க்க சென்றனா். நண்பரை பாா்த்துவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டனா்.
அப்போது நாமக்கல் பிரதான சாலை உஞ்சனை அருகே ஓட்டுநா் யுவராஜன் தூங்கியதால் நிலைதடுமாறிய காா் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த இருசக்கர வாகனங்களின் மீது மோதிவிட்டு, அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்ததில் வீட்டு வாசலில் அமா்ந்திருந்த முருகேசன் (67) என்பவா் உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த யுவராஜன் (34), காரின் இடதுபுற இருக்கையில் அமா்ந்திருந்த சரவணன் (30) ஆகியோா் படுகாயம் அடைந்தனா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊரக போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விபத்தில் உயிரிழந்த முருகேசனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு எளையாம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.