கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
பரமத்தி வேலூா் அருகே மது அருந்த பணம் தராத உறவினரைத் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே மணியனூா் உலகபாளையம் லட்சுமி நகரை சோ்ந்தவா் சரவணகுமாா் (35). இவா் தனது உறவினரான மணியனூா் முதலியாா் தெருவைச் சோ்ந்த ரிக் லாரி தொழிலாளி கணேசனிடம் (33) கடந்த 2022-ஆம் ஆண்டு மது அருந்த பணம் கேட்டுள்ளாா்.
கணேசன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரம் அடைந்த சரவணகுமாா், அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த கணேசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
கைது செய்யப்பட்ட சரவணகுமாா் மீதான வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றம்சாட்டப்பட்ட சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.