செய்திகள் :

திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

post image

அறிக்கை அடிப்படையில் திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பாக சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , கால்நடை , மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்குபெற்று ஐஐடி உள்ளிட்ட 5 அமைப்புகள் சார்பில் கடல் அரிப்பை தடுப்பது குறித்து காணொலி காட்சியில் இணைந்து வழங்கிய பரிந்துரைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,

18.1.25 ல் நேரில் சென்று ஆய்வு நடத்தி 5 பிரிவினரிடம் கடல் அரிப்பை தடுப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வுப் பணியை ஒப்படைத்தோம்.

இன்று காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று அந்த குழுவினர் தங்கள் அறிக்கையை வழங்கினர்.

3 பேரது அறிக்கைகள் ஒன்றாக உள்ளன. 2 பேரின் அறிக்கைகளில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

எனவே இன்று அல்லது நாளைக்குள் இறுதி அறிக்கையை அவர்கள் 5 தரப்பும் இணைந்து வழங்குவர்.

திங்கள் அல்லது செவ்வாய்க்குள் அறிக்கை பெற்று அதன்படி ஒப்பந்தம் வழங்கி கடல் அரிப்பை தடுக்கும் பணிகளை தொடங்குவோம்.

உரிய தடுப்பு நடவடிக்கை எடுத்தபின் திருச்செந்தூர் கடலில் இறங்கி நீராடுவது போன்ற அனைத்து வழிபாட்டு முறைகளும் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருச்செந்தூர் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்செந்தூர் கோயில் பாதுகாப்புக்காக 19 கோடியளவிலான கோயில் நிதியை மீன்வளத்துறைக்கு வழங்கி 65 சதவீத பணிகள் நிறவடைந்துள்ளன. கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் பாதிக்காத வகையிலும் தேவையான நடவடிக்கை தனியாக மேற்கொள்ளப்படும்.

திருச்செந்தூர் கோயிலுக்கு தைப் பூசத்திற்கு வரும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடல் அரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் .

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக அரசு

முன்பெல்லாம் தமிழக பக்தர்கள் அண்டை மாநில கோவில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்த அதிகமாக செல்லுவார்கள் .

தற்போது அண்டை மாநிலத்தவர்கள் நேர்த்திக் கடன் செலுத்த தமிழக கோயில்களுக்கு அதிகமாக வருகின்றனர்.

பழநி , திருச்செந்தூர் , திருத்தணி , திருவண்ணாமலை போன்ற கோயில்களுக்கு வெளிமாநில பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். சில கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அனைத்து கோயில்களிலும் கட்டணமில்லா தரிசனமே தமிழக அரசின் நோக்கம். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையை சில மதவாத அமைப்பினர் ஊதி பெரிதாக்குகின்றனர் என்றார்.

அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!

அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கட... மேலும் பார்க்க

ஜன. 30, 31ல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகிற ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி கேள்வி

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்!

புது தில்லி: சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அண்ணா பல்கல... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்.1ஆம் தேதிக்குள் முடிவடையும் என தகவல் தெரியவந்துள்ளது... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? உச்ச நீதிமன்றம்

புது தில்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்க... மேலும் பார்க்க