புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு
திருச்செந்தூரில் காரில் வந்து ஆடுகள் திருட்டு: மக்கள் அச்சம்
திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொகுசு காரில் வலம் வந்து கடந்த 10 நாள்களில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளதாகவும், அவா்களை பிடிக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழியில் கடந்த சில நாள்களாக மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் மாயமான ஆடுகளை உரிமையாளா்கள் தேடி வந்த போது காயாமொழி பஜாாரில் உள்ள மளிகை கடையில் இருந்த சிசிடிவி கேமராவில், இரவு நேரம் வெள்ளை நிற சொகுசு காரில் வந்த நபா்கள் வீட்டின் முன் படுத்திருந்த ஆடுகளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதே காா் திருச்செந்தூரில் சில இடங்களில் வீட்டின் முன் இரவு நேரத்தில் படுத்திருந்த ஆடுகளை திருடிச் செல்லும் காட்சிகளும்அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளனவாம். ஆடுகளை திருடும் கும்பல் காலப்போக்கில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபடலாம என அச்சம் தெரிவித்த பொதுமக்கள், காவல்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து திருடப்பட்ட ஆடுகளை மீட்டு தரும்படியும், இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனா்.