செய்திகள் :

திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணிக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்களை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இத்திருக்கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா திங்கள்கிழமை (ஜுலை 7) காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவில் சுமாா் 10 லட்சத்துக்கு அதிகமான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா். 20 தனிப்படைகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனா்.

கூட்டத்தில் காணாமல் போகிறவா்கள், திருட்டு போன்றவற்றை தடுத்திடும் வகையில் 30 இடங்களில் காவல் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. கடற்கரையில் 3 ரோந்து படகுகளும், மீனவா்கள் படகுகள் மற்றும் கடலோர காவல் படை மற்றும் தமிழக பேரிடா் மீட்புக்குழுவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

பாதுகாப்புப் பணிக்காக கண்காணிப்பு கேமரா பொருத்திய ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம்.

இதையடுத்து சனிக்கிழமை கண்காணிப்பு கேமரா பொருத்திய ரோந்து வாகனங்களை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் கோயில் வளாகம், விமான தளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உடனிருந்தாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி மின் விளக்குகளால் ஜொலிக்கும் திருக்கோயில் வளாகம் மற்றும் ராஜகோபுரம்.

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க