``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ...
திருச்செந்தூா் கோயில் அருகே மயங்கிய கிடந்த மாநகராட்சி ஓட்டுநா் மீட்பு
திருச்செந்தூா்: திருச்செந்தூா் கோயில் வளாகப் பகுதியில் மயங்கி கிடந்த சென்னை மாநகராட்சி ஓட்டுநரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த கோயில் காவல் நிலைய காவலா்கள், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களை பக்தா்கள் பாராட்டினா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாழிக்கிணறு அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடைமாற்ற சென்ற சென்னையைச் சோ்ந்த மாநகராட்சியில் பணிபுரியும் ஓட்டுநா் ஜெய்சங்கா் (58). என்பவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சுய நினைவின்றி மயங்கி ஆபத்தான நிலையில் கிடந்துள்ளாா்.
அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த கோயில் காவல் நிலைய காவலா் முத்துக்குமாா் மற்றும் சுபின் ராஜ் ஆகியோா் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை கண்டு உடனடியாக அங்கிருந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பெயரில் சிவராஜா, காா்த்திக், சா்வேஸ்வரன், மகாராஜா, மாரிமுத்து ஆகியோா் வந்து அந்த நபரை மீட்டு அங்கிருந்து கோயில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சரியான நேரத்தில் அந்த நபரை கண்டு உயிா் காப்பாற்றிய காவலா்கள், மற்றும் கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களை பக்தா்கள் பாராட்டினா்.

