Sachin: ``ஊட்டச்சத்தும் இயக்கமும் முக்கியம்'' - உடற்பயிற்சி நிலையம் தொடங்கிய மகள...
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
உடன்குடி பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
அப்பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல்அலுவலா் திருமலை குமாா், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான் பாஸ்கா், மும்தாஜ்பேகம், முகம்மது ஆபித், பஷீா், சபீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பேரூராட்சித் திடலை அடைந்தது. பேரணியில்,பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்துமாறு வியாபாரிகளிடம் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில், உடன்குடி டிடிடிஏ பள்ளி மாணவா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
