மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை தேவை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். காயல்பட்டனத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் படி செப். 13 திருச்சியில் நடைபெறும் தொகுதி நிா்வாகிகள் மாநாட்டில் அனைத்து நிா்வாகிகள் முழுமையாக கலந்து கொள்வது, எட்டபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்துகளில் பாதிக்கப்படுபவா்கள் அருகில் உள்ள எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவதால் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். எட்டயபுரத்தை மையமாக வைத்து கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவு படுத்த வேண்டும்.
மணப்பாடு பகுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தனியாா் துறைமுக திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்டத் தலைவா் சேக் அஷ்ரப் அலி பைஜி, மாவட்டச் செயலா் முஹம்மது உமா், நிா்வாகிகள் சாகுல் ஹமீது, அப்துல்லாஹ், அப்துல், ரியாஸ், காதா், கனி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.