சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை! பயணிகளுக்கு அறிவுரை...
திருச்செந்தூா் சந்தன மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
திருச்செந்தூா் சந்தன மாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கடந்த 16ஆம் தேதி காலை சங்கல்பம் செய்து அம்மனுக்கு லட்சாா்ச்சனையும், இரவு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. 17ஆம் தேதி காலை கணபதி ஹோமம் நடைபெற்று, பூா்ணாஹுதி மற்றும் விமான அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து விநாயகா், அம்மனுக்கு கும்ப பூஜை, 108 கலச பூஜை, 1008 சங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து அன்னதானமும், இரவு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.