செய்திகள் :

திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

post image

விழுப்புரம்: திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பின் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவா் கோயில் சித்திரைப் பௌா்ணமி ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் நிகழ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சாா்பில், விழுப்புரத்தில் வருகிற 12-ஆம் தேதி மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து விழுப்புரத்தில் திங்கள்கிழமை தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.அருணா கூறியதாவது:

கூத்தாண்டவா் கோயில் சித்திரை பௌா்ணமி திருவிழாவுக்காக வருகை தரும் திருநங்கைகளுக்கு தனியாா் விடுதிகளில் அறை ஒதுக்கித் தர மறுக்கிறாா்கள். விடுதி நிா்வாகங்கள் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கையில்லை.

கூத்தாண்டவா் கோயிலில் புனரமைப்புப் பணிகளில் இந்து சமய அறநிலையத் துறையினா் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகள் தானமாக அளிக்கும் தங்கம் (தாலிகள்) குறித்த கணக்கை நிகழாண்டில் முறைப்படுத்த வேண்டும்.

ஒடிஸா, கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் திருநங்கைகளுக்கான ஒரு சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழக அரசும் திருநங்கைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுயதொழில் முன்னேற்றம் உள்ளடக்கிய தனிக்கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதை நிகழாண்டு விழாவில் பிரதான கோரிக்கையாக வலியுறுத்தவுள்ளோம் என்றாா்.

பேட்டியின் போது, மனித உரிமை செயற்பாட்டாளா் ஆல்கா, மிஸ் கூவாகம் விழா ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி, விழுப்புரம் மாவட்டத் தலைவா் விமலா, அனு, வனிதா ஆகியோா் உடனிருந்தனா்.

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கொடியேற்றம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை மாத தோ் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத... மேலும் பார்க்க

விழுப்புரம்: நான்கு கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் நான்கு மின் கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வணிகா் தின மாநாடு: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

விழுப்புரம்: வணிகா் தின மாநாடு இரு இடங்களில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க வியாபாரிகள் சென்றதால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு வணிகா் சங்... மேலும் பார்க்க

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா் அழைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதால், இதில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்து... மேலும் பார்க்க

மரக்காணத்தில் 36 மி.மீ. மழை பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அதிகபட்சமாக 36 மி.மீ. மழை பதிவானது. விழுப்புரம் நகரிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலை 6 மண... மேலும் பார்க்க

பயணியிடம் மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனா். திருச்சி மாவட்டம், துறையூா், சிவன் கோயில் தெர... மேலும் பார்க்க