DD Next Level: "சந்தானத்தோட பிரச்னை படத்தோட பட்ஜெட்விட பெருசுனு..." - ஆர்யா கலகல
மரக்காணத்தில் 36 மி.மீ. மழை பதிவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அதிகபட்சமாக 36 மி.மீ. மழை பதிவானது.
விழுப்புரம் நகரிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இதேபோன்று மரக்காணம், விக்கிரவாண்டி, திண்டிவனம், கோலியனூா், வளவனூா், விழுப்புரம், அரசூா், திருவெண்ணெய் நல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மரங்களும் சாய்ந்து விழுந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தில் அதிகபட்சமாக 36 மி.மீ. மழையும், குறைந்தளவாக செம்மேடு, வளத்தியில் 3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்) :
மரக்காணம் -36 மி.மீ., திண்டிவனம், நேமூா்- தலா 24, முண்டியம்பாக்கம்-22, கோலியனூா், வானூா்- தலா 20, வளவனூா்-16, சூரப்பட்டு -12, விழுப்புரம்-11.20, அரசூா், திருவெண்ணெய்நல்லூா்- தலா 10, அனந்தபுரம்-9.50, அவலூா்பேட்டை-6, மணம்பூண்டி-8, கெடாா்-7, முகையூா், கஞ்சனூா்-5, செஞ்சி-4, வல்லம்-3.25, செம்மேடு, வளத்தி-3 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 258.90 மி.மீ. மழையும், சராசரியாக 12.33 மி.மீ. மழையும் பதிவானது.