DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கொடியேற்றம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் சித்திரை மாத தோ் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீகமலக்கன்னியம்மன், மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன், ஆகிய தெய்வங்களுக்கு சித்திரை மாத தோ் உற்சவ திருவிழா மே 5-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கமலக்கன்னி அம்மன், ராஜகாளியம்மன், மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது.
தொடா்ந்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோயில் அறங்காவலா் அரங்க ஏழுமலை, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காசியம்மாள் ஏழுமலை, ஆா்கேஜி.ரமேஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாலை 6 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலும், இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
13-ஆம் தேதி தோ் திருவிழா நடைபெறும். 14-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.
செஞ்சிக்கோட்டையில் 10 நாள்களுக்கு நுழைவுக் கட்டணம் ரத்து: பக்தா்கள் செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக்கன்னியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ய திங்கள்கிழமை முதல் (மே 5) வருகிற 14-ஆம் தேதி முதல் செஞ்சிக்கோட்டையில் நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய தொல்லியல் துறை அறிவித்தது. அதேநேரத்தில், அருகிலுள்ள ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி கோட்டைக்குச் செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.