தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம்
நாகையில் திருநங்கையா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் 17 திருநங்கையா்கள் கலந்து கொண்டனா். அவா்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிடவும், மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுதரவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டியும், சுயதொழில் செய்வதற்கு கடன் வசதி ஏற்படுத்தி தரவும், ஓய்வூதியம் மாதம் தவறாமல் வழங்கிடவும், மானியம் வழங்கிடவும் கோரிக்கை வைத்தனா்.
திருநங்கையா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா், அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவாக செய்து தரப்படும் என தெரிவித்தாா்.
மாவட்ட சமூகநல அலுவலா் கி. திவ்யபிரபா, தாட்கோ இணை மேலாளா் சக்திவேல், உதவி திட்ட அலுவலா் மகளிா் திட்டம் இந்திராணி, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.