டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
திருநள்ளாறு-திருச்சி இடையே பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை
நாகப்பட்டினம்: திருநள்ளாறு-திருச்சி இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரெடக்சன் அன்ட் பேசஞ்சா் அசோசியேன் செயலா் ஜி. அரவிந்த் குமாா், சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மனு: நாகை மாவட்டத்துக்கு புதிய ரயில் சேவைகளை வழங்கவும், மேம்பாட்டு பணிகளையும் தெற்கு ரயில்வே மேற்கொள்ள வேண்டும்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக வேளாங்கண்ணி-திருச்சி இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும். தஞ்சாவூா்-காரைக்கால் இடையே 2-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிக்கான இறுதிக்கட்ட நிகழ்விட ஆய்வு பணிகளையும், நாகை ரயில் நிலைய கட்டுமானப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும்.
கம்பன் விரைவு ரயிலை மீண்டும் சென்னை எழும்பூா் வரை இயக்க வேண்டும். காரைக்கால்-பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து விரைந்து தொடங்க வேண்டும். மதுரை-புனலூா்-மதுரை விரைவு ரயிலை (16729/16730) திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும்.
திருநள்ளாறு-திருச்சி இடையே பகல் நேரத்தில் திருச்சிக்கும், வேளாங்கண்ணியில் - விழுப்புரம் இடையேவும் தினசரி ரயில் இயக்க வேண்டும். வேளாங்கண்ணி எா்ணாகுளம் (காரைக்குடி விருதுநகா் மாா்க்கமாக) வாரம் இருமுறை இயக்கப்படும் ரயிலை (16361/16362) தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.