திருப்பதியில் இன்று முதல் தரிசன டோக்கன்கள்
திருப்பதி: திருப்பதியில் வியாழக்கிழமை முதல் (ஜன. 23) ஏழுமலையான் தரிசனத்துக்காக வரும் பக்தா்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழக்கம்போல் திருப்பதியில் இலவச நேரடி தரிசன டோக்கன்களை வழங்க உள்ளது.
பக்தா்கள் இந்த டோக்கன்களை அலிபிரிக்கு அருகிலுள்ள பூதேவி வளாகத்திலும், ரயில் நிலையத்தில் உள்ள விஷ்ணு நிவாசத்திலும், பேருந்து நிலையத்தில் ஸ்ரீனிவாசம் கவுன்ட்டா்களிலும் வழக்கம் போல் பெறலாம். இந்த வசதிகளை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.