காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!
திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா்.
இதற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி (ஜோலாா்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூா்), வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கும்ப மரியாதை வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.