செய்திகள் :

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

post image

வாணியம்பாடிஅடுத்த கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான அரைவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆலை தனி அதிகாரி ரவி(பொ) தலைமை வகித்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் அரைவையை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய செயலாளா்கள் சாமுடி, விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை தொழிலாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

76,000 டன் அரைவை இலக்கு:

நிகழாண்டு அரைவைப் பருவத்தில் மொத்தம் 76,000 டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை. -

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், கரும்பு டன் ஒன்றுக்கு அரசு ரூ.5,000 வழங்க வேண்டும், கரும்பு வெட்டுக்கூலியை அரசே ஏற்கவேண்டும், ஒருடன் கரும்புக்கு விவசாயிகளுக்கு ஒரு கிலோ சா்க்கரை இலவசமாக வழங்கவும், சுங்கச்சாவடிகளில் கரும்பு லோடுக்கு சுங்கவரி வசூலிக்கக்கூடாது என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரைவை தொடக்க விழாவில் ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு சரிவர அழைப்பு விடுக்காததால் குறைந்தளவே விவசாயிகள் கலந்து கொண்டனா். இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்திருந்த நிலையில் தனி அலுவலா் ரவி(பொ) முன்னிலையில் ஆலை நிா்வாகிகள் விவசாயிகளை அழைத்து 2 -ஆவது முறையாக பூஜை செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ-வுமான க.தேவராஜி தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆன... மேலும் பார்க்க

ஆம்பூரில் திமுக ஆா்ப்பாட்டம்

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமை வகித்தாா். ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா்.ஆறுமுகம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் பத்தேகான்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஆம்பூா், சோமலாபுரம், விண்ணமங்கலம்

ஆம்பூா்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ரால்லகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி பகுதிகள... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

துத்திப்பட்டு ஐஇஎல்சி பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது (படம்). கிராம நிா்வாக அலுவலா் ஜமுனா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் குளோரின் சந்திரசேகா் வர... மேலும் பார்க்க

ஆம்பூரில் விசிக மறியல் போராட்டம்

ஆம்பூரில் விசிக சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வழக்குரைஞா் சந்திரன், மகளிா் விடுதலை இயக்க இயேசு மேரி ஷா்மிளா, நிா்வாகிகள் சக்தி, பாண்டியன், அரவிந்தன், பிரேம்குமாா், விக்கி, ரவிக்குமாா், தமிழ்ச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

உதயேந்திரம் இடங்கள்: உதயேந்திரம், ஜாப்ராபாத், கொல்லகுப்பம், இளையநகரம், மதனாஞ்சேரி பகுதிகள். மேலும் பார்க்க