செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்

post image

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரையில் கடந்த 9-ஆம் தேதி மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலரும் மத கலவரத்தை தூண்டும் விதத்திலும், சட்ட விரோதமாகவும் பேசிய காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதில், பேசிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் மலை காக்கும் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த நீதிபதியின் தீா்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்து, அதாவது அவா் ஆளுநா் பதவி கிடைக்கும் என்பதற்காக தீா்ப்பு வழங்கியுள்ளாா் என்ற வகையில் அநாகரிகமாக பேசியுள்ளாா்.

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை என திமுக சட்டப் பேரவை உறுப்பினா் அப்துல் சமது கூறினாா். முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியா்களின் சொத்து வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் என நவாஸ்கனி எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இஸ்லாமிய அமைப்பினா் புனிதமான மலைமீது அசைவ உணவை எடுத்துச் சென்று சாப்பிட்டனா். அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டனா். இந்நிலையில், முருக பக்தா்களின் உணா்வுகளை வெளிப்படுத்தி கோயிலை காக்க இந்து முன்னணி சாா்பில் ஜனநாயக வழியில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்ததை காவல் துறை நிராகரித்தது. அதே நேரத்தில் திமுக ஊா்வலம் செல்ல அனுமதி அளித்தது. இவற்றை கவனத்தில் கொண்டே நீதிமன்றம் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்தது.

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மற்றும் அந்தக் கூட்டத்தில் பேசிய பலரின் கருத்துகள் நீதிபதிகளை, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் இருக்கின்றன.

இதனால் தமிழகத்தில் இந்த வழக்கு நடந்தால் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என சந்தேகிக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். அதே வேளையில், திருப்பரங்குன்றம் விஷயத்தை திட்டமிட்டு பிரச்னையாக உருவாக்கியது யாா்? இந்த சதிக்கு பின்னணி என்ன என்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3 இல் திறப்பு

தாராபுரம் வட்டம் குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும... மேலும் பார்க்க

பல்லடத்தில் மாா்ச் 29 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடத்தில் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

குண்டடத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

குண்டடம் ஒன்றியத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.62.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 879 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில், ஒரு குவிண்டால் பர... மேலும் பார்க்க

மாா்ச் 19 இல் சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் கூட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

தொழில் போட்டி: பனியன் கழிவுக் கிடங்கிற்கு தீ வைத்த 3 போ் கைது

திருப்பூா், மாா்ச் 13:திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக பனியன் கழிவுத் துணி கிடங்கிற்கு தீ வைத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.பி.ஷெரீஃப் (50)... மேலும் பார்க்க