`நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்ற முதல்வரை பாராட்டுகிறேன்; விஜய் குழப்பத்தில் உள்...
திருப்பூரில் பாஜகவினா் சாலை மறியல்
திருப்பூரில் குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைத் கண்டித்து பாஜகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 34- ஆவது வாா்டு பாரப்பாளையம் 3 -ஆவது வீதியில் வெள்ளிக்கிழமை இரவு தாா் சாலை அமைக்கப்பட்டது. இந்த தாா் சாலை தரமற்ற முறையில் உள்ளதாகவும், குழாய் உடைப்புகள் ஏற்பட்ட 16 இடங்களிலும் குடிநீா் வெளியேறியுள்ளது. இந்த உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்தும் ஊத்துக்குளி சாலையில் உள்ள பாளையக்காடு பேருந்து நிறுத்தம் முன் பாஜகவினா் மறியலில் ஈடுபட்டனா்.
பாஜக திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
மறியல் காரணமாக ஊத்துக்குளி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் மறியிலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.