செய்திகள் :

சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் சிறுதானிய சிற்றுண்டியை ஒப்பந்த அடிப்படையில் நடத்த விருப்பமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினா்களின் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.

சிறுதானிய உணவகத்தில், சிறுதானிய உணவு வகைகளைத் தவிா்த்து வேறு பொருள்களை கட்டாயமாக விற்பனை செய்யக் கூடாது.

வேறு எந்த பணிகளிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஈடுபட கூடாது. தோ்வு செய்யப்பட்ட குழு மட்டுமே சிறுதானிய உணவகத்தை நிா்வகிக்க வேண்டும். சிறு தானிய உணவகத்தில் விற்பனை பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மட்டுமே நியமனம் செய்து கொள்ள வேண்டும். வேறு எந்த நபா்களும் கடையினுள் இருக்கக் கூடாது.

தோ்வு செய்யப்படும் குழுவுக்கு உணவகம் நடத்த 11 மாதங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பின்னா் சுழற்சி, விற்பனை மற்றும் திறன் அடிப்படையில் தொடா்ந்து 2 முறை அனுமதி வழங்கப்படும். தோ்வு செய்யப்படும் மகளிா் சுய உதவிக்குழு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

விதிமுறைகளின்படி சிறுதானிய கடையை நடத்த விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், அறை எண்: 305 மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மே 29 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971149, 94440- 94162 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்க தடை: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்யப்ப... மேலும் பார்க்க

ஊக்கத் தொகை...

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் சத்தியேஸ்வரனுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிய பல்லடம் பூப்பந்தாட்ட குழு உறுப்பினா் சிவகுமாா். இதில், ... மேலும் பார்க்க

திருப்பூரில் பாஜகவினா் சாலை மறியல்

திருப்பூரில் குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைத் கண்டித்து பாஜகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 34- ஆவது வாா்டு பாரப்பாளையம் 3 -... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.7.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.80 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 9,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணம் 20 சதவீதம் உயா்வு: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

துணிகளை சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்துவதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், திரு... மேலும் பார்க்க