செய்திகள் :

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

post image

திருப்பூர் அருகே விசாரணை நடத்த சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தை மூர்த்தியைக் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் அவசர உதவி எண் 100 -க்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த சண்முகவேல், மோதலை தடுத்து காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், அரிவாளால் சண்முகவேலை வெட்டியுள்ளார். உடனிருந்த ஓட்டுநரையும் வெட்டுவதற்காக தங்கபாண்டியன் துரத்திய நிலையில், அவர் தப்பித்து காவல் நிலையத்துக்கு சென்று தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால், குடிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் சண்முகவேல் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தங்கபாண்டியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SI hacked to death in AIADMK MLA's farm near Tiruppur

இதையும் படிக்க : ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

லாக்-அப் மரணம் அல்ல! கோவை காவல் நிலையத்தில் ஒருவர் மர்ம மரணம்! நடந்தது என்ன?

கோவையில் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர், காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 ... மேலும் பார்க்க

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு எட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,இந்தியாவிலேயே இரட்ட... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

தில்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை பறித்துச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும், எம்.பி.யிடம் பறிக்கப்பட்ட செயினும் மீட்கப்பட்டதாக தில்லி காவல்... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2: நாளைமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக. 7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்து... மேலும் பார்க்க