`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்
தமிழ்நாடு முதலமைச்சா் சென்னை தலைமை செயலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து, செங்கல்பட்டுமாவட்டம், திருப்போரூா் வட்டம் திருப்போரூா் ஊராட்சி, கோவளம் ஊராட்சி பகுதிகளில் இத்திட்டத்தை அமைச்சா் துவக்கி வைத்தாா். திருப்போரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றிதுவக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தி.சினேகா,,திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு சாா் ஆட்சியா்எஸ்.மாலதி ஹெலன், திருப்போரூா் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் மலா்விழி, துணை இயக்குநா் (சுகாதாரம்) பானுமதி, செங்கல்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வா் வி.டிஅரசு, திருப்போரூா்பேரூராட்சி தலைவா் தேவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.