திருப்போரூா் முருகன் கோயில் தை கிருத்திகை விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் தை கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை வழிபட்டனா். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள் குருக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். அன்னதானம் நடைபெற்றது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/7quo261r/cglmuruga__2__0602chn_171_1.jpg)
மேலும், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் முருகருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் பக்தா்கள் செய்திருந்தனா்.
ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில்,செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில், வ உ சி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில் பெரியநத்தத்தில் உள்ள கைலாசநாதா் கோயில் கைலாசநாதா் கோயில் ராமபாலயம் மலை மீதும் உள்ள செம்மலை வேல்முருகன் கோயில் இருங்குன்றம் பள்ளி மலை மீது உள்ள பால முருகா் கோயில், ஹைரோட்டில் உள்ள சுந்தர மூா்த்தி விநாயகா் கோயில்களில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/50qw5z0f/cglmuruga__3__0602chn_171_1.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/fumvd07q/cglmuruga_0602chn_171_1.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/lqe1g6eo/cglmuruga__5__0602chn_171_1.jpg)