திருமணம், குழந்தை பெறுதல் சிக்கலாகுமா? தம்பதியை அதிர்ச்சியடைய செய்த மருத்துவர்!
பெங்களூரைச் சேர்ந்த தம்பதி கண் பிரச்சனை காரணமாக உள்ளூர் கண் மருத்துவரை அணுகியுள்ளனர். அங்கு அந்த மருத்துவர் அவர்களை பரிசோதித்த பின்னர் கண் பிரச்சனைக்கும் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலுக்கும் தொடர்பு இருப்பது குறித்து கருத்து தெரிவித்து தம்பதியினர்களை அதிர்ச்சடையைச் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த தம்பதி ரெட்டிட் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தம்பதிகளின் பதிவுப்படி" கண் தொடர்பான பிரச்னைக்கு கண் மருத்துவரை அணுகியபோது நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று என்னிடமும் என் மனைவியிடமும் அவர் கேட்டார். அப்போது அவர் ஆஸ்டிஜிமாடிசம் பற்றி பயமுறுத்தும் வகையில் என்னிடம் பேசினார். நான் ஐடியில் வேலை செய்கிறேன்.

ஒரு நாளைக்கு சுமார் பத்து மணி நேரம் திரையைப் பார்ப்பேன் என்று கூறிய போது மருத்துவர் என்னிடம் இந்த தொழிலை இனிமேல் தொடர முடியாது, தொடர்ந்தால் எனக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறினார்.
அதுமட்டுமில்லாமல் மனைவியை பரிசோதனை செய்த பின்பு" நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்குமுன் யாரிடமும் கலந்த ஆலோசிக்கவில்லையா?
கிட்டப் பார்வை உள்ள இரண்டு பேர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே இதனால் பாதிக்கப்படுவார்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு யோசித்து ஆலோசனை பெறுங்கள்.. என்று மருத்துவர் கூறியதாக அதில் பகிர்ந்திருந்தார்.
எந்தவொரு மருத்துவரும் திருமணம் செய்து கொள்வதைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பெறுவதைப் பற்றியோ மக்களை குற்ற உணர்ச்சியடையச் செய்யக்கூடாது. குறிப்பாக ஆஸ்டிஜிமாடிசம் போன்ற பொதுவான பிரச்னை இருப்பவர்களுக்கு” என்று கூறியிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலானதை அடுத்து, சமூக ஊடகப் பயனர்கள் கடுமையாக இதனை விமர்சித்து வருகின்றனர்.