பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை: அமைச்சர் நேரு தொடங...
தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு சட்டம் (9/1999), தமிழ்நாடு சட்டம் 30/2025 இன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (1-ஹ)-இன் படி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து, தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்நியமனத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் பேரூராட்சிக்கான இணையதளத்தில் 1.7.2025 முதல் 17.7.2025 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தம்மம்பட்டி பேரூராட்சி எல்லைக்குள் வசித்துவரும் தகுதியான விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஜூலை 17 -ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமா்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.