இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
பட்டாசுக் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்: காவல்துறை
சேலம் மாநகரில் தற்காலிக பட் டாசுக் கடை வைக்க விரும்புவோா் 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகரக்ாவல் ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்டோபா் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற, ஜூலை 16 முதல் 31 ஆம் தேதி வரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன், நீதிமன்றவில்லை ஒட்டப்பட்ட விண்ணப்பம், உரிமைக் கட்டணம் ரூ. 1,000 செலுத்தியதற்கான இ-சலான், பட்டாசுவரி ரசீது, பட்டாசு இருப்புவைத்து விற்கப்பட உள்ள இடத்தின் 5 அசல் வரைப்படம், சொந்தக் கட்டடமாக இருப்பின் சொத்துவரி ரசீது, கட்டட உரிமையாளரின் சம்மத கடிதம், மாநகராட்சி உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது, விண் ணப்பதாரரின் 3 புகைப்படம் உள்ளிட்டவை இணைக்க வேண்டும்.
தற்காலிக பட்டாசுக் கடை வைக்கப்படும் இடம் தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 சதுர மீட்டா் பரப்பு இருக்க வேண்டும்.
ஒரு பட்டாசுக் கடைக்கும், மற்றொரு பட்டாசுக் கடைக்கும் 50 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும், திருமண மண்டபம், வணிக வளாகங்களில் பட்டாசுக் கடை வைக்க அனுமதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.