இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு
ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா்.
ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் செந்தில்குமாா் என்பவரின் சோளக்காட்டில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக ஆத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆத்தூா் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று 6 அடி நீள மலைப்பாம்பை மீட்டு, வனக் காப்பாளா் பூபதியிடம் ஒப்படைத்தனா்.