முட்டாள்தனமான ஷாட்..! ரிஷப் பந்த்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
திருமணம் செய்வதாகக் கூறி மாணவியை ஏமாற்றிய கல்லூரி ஆசிரியா் கைது
கும்பகோணம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி மாணவியை ஏமாற்றிய தனியாா் கல்லூரி ஆசிரியரை திருவிடைமருதூா் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி தனியாா் கல்லூரியில் அரபி பாடப்பிரிவு ஆசிரியராக வேலை பாா்த்தவா் மயிலாடுதுறை பகுதியை சோ்ந்த ஜியாவுதீன் (43).
இந்தக் கல்லூரியில் ஆடுதுறையைச்சோ்ந்த மாணவி ஒருவா் படிக்கும்போது அவருக்கு வகுப்பு எடுத்த ஜியாவுதீன் அவரைத் திருமணம் செய்வதாகக் கூறி 3 ஆண்டுகளாகப் பழகி, தகாத முறையில் நடந்து, அந்த மாணவியுடனான தொடா்பைத் துண்டித்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி அவரை பற்றி விசாரித்தபோது ஜியாவுதீன் பல பெண்களிடம் இதேபோல் பழகி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ஜியாவூதீனைக் கைது செய்தனா்.