செய்திகள் :

திருமணம் மீறிய உறவு; வேறொரு புதிய தொடர்பால் ஆத்திரம் - பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆண் நண்பர்

post image

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர், கணவன் மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்துவருகிறார். கணவன் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்தார். பிள்ளைகள் மற்றும் மாமனாருடன் அந்த பெண் வசித்துவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டனர், நகைகளை அடகுவைப்பதற்காக மாமனார் வங்கிக்குக்குச் சென்றுவிட்டார். வங்கிக்குச் சென்று திரும்பிவந்த மாமனார்வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடப்பதை பார்த்தார். திறக்க முயன்றும் முடியவில்லை.

சந்தேகத்தில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு அந்த பெண் பிறப்புறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் நித்திரவிளை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்ணுக்கும் பூத்துறை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முகம்மது இப்ராஹிம்(39) என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதும் தெரியவந்தது.

நித்திரவிளை காவல்நிலையம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "அந்த பெண்ணின் கணவன் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் செல்வதால், பெரும்பாலான நாட்களில் அவர் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கும், வெளியே செல்வதற்கும் பூத்துறை பகுதியை சேர்ந்த முகம்மது இப்ராஹிமின் ஆட்டோவில் பயணித்து வந்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, திருமணம் மீறிய உறவாக மாறி உள்ளது. அந்த பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆட்டோ டிரைவரை அழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஆட்டோ டிரைவருடன் மனைவிக்கு தொடர்பு இருக்கும் விவகாரம் கணவருக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார்.

கை உடைந்த நிலையில் ஆட்டோ டிரைவர் முஹமமது இப்ராஹி.

அதுமட்டும் அல்லாது இன்ஸ்டாகிராம் மூலம் கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு புதிய நட்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக முஹம்மது இப்ராஹிமுடன் பேசுவதை  குறைத்துக்கொண்டதாக தெரிகிறது. அதே சமயம் அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் புதிய நண்பன் கிடைத்துள்ளது முஹம்மது இப்ராஹிமுக்கும் தெரியவந்தது. இதற்கிடையேத்தான் அந்தபெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த முஹம்மது இப்ராஹிம் பின்பக்க காம்பவுண்ட் சுவரில் ஏறிக்குதித்து அவரது வீட்டுக்குள் சென்றார்.

அப்போது, இன்ஸ்டா காதலுடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த பெண். இதைபார்த்த முஹம்மது இப்ராஹிம் அந்த பெண்ணிடம் தகராற்றில் ஈடுபட்டதுடன், வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பெண்ணின் பிறப்புறுப்பை கையாலும், வேறு சில பொருட்களாலும் தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்" என்றனர்.

இதற்கிடையே நம்பாளி பகுதியில் தலைமறைவாக இருந்த முஹம்மது இப்ராஹிமை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பி ஓட முயன்ற முஹம்மது இப்ராஹிம் கீழே விழுந்து கை முறிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

”இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா?”- தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் கலங்கிய பெண்; பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்த அய்யாவு (55) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி சாந்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு த... மேலும் பார்க்க

கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அ... மேலும் பார்க்க

Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?

மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?

நாகப்​பட்​டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ் ​(வயது 32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்ணறி​வுப் பிரி​வினருக்குத் தகவல் கிடைத்​தது.இத... மேலும் பார்க்க

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் ... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்... மேலும் பார்க்க