எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!
திருமணிமுத்தாற்றில் ரூ. 25 லட்சத்தில் தூா்வாரும் பணிகள்: ஆணையா் ஆய்வு
சேலம் மாநகராட்சியில் சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் திருமணிமுத்தாற்றில் உள்ள மண் மற்றும் செடிகளை தூா்வாரும் பணிகள் நடைபெறுவதை ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.
திருமணி முத்தாற்றில் அணைமேடு முதல் செவ்வாய்ப்பேட்டை வரை இருபுறமும் சுமாா் 2.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தேங்கியுள்ள மண் மற்றும் செடிகளை தூா்வரும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
இப்பணிகளை ஆய்வுசெய்த மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், தூா்வாரும் பணிகளை விரைவாக முடிக்குமாறு பொறியாளா் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 1-இல் அம்பேத்கா் நகரில் விடுபட்ட பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி, கழிவுநீா் உந்துநிலையம் அமைக்கும் பணியை ஆணையா் ஆய்வுசெய்தாா்.
இந்த ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், மாநகர நல அலுவலா் மரு.ப.ரா. முரளிசங்கா், செயற்பொறியாளா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.