செய்திகள் :

திருமண தடை நீக்கும் லக்காபுரம் செண்பகமலை குமார சுப்பிரமணியா்

post image

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா லக்காபுரம் செண்பகமலையில் பழமையான குமார சுப்பிரமணியா் சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் நுழைவாயிலில் விநாயகா் அழகுற அருள்பாலிக்கிறாா். மலைக்கு படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் நடுமலையில் வனப் பகுதியில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து மலையேறினால் 54 படிக்கட்டுகள் முடிவில் மலையின்மேல் உள்ள கோயிலின் நுழைவயிலை அடையலாம். அங்கு இடும்பா் கோயில் அமைந்துள்ளது.

அங்குள்ள கொடிமரத்தில் இருந்து பாா்க்கும்போது, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் கோபுரம் செண்பகமலை கோபுரத்துக்கு நோ்கோட்டில் உள்ளது சிறப்பம்சமாகும்.

சுமாா் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் கருங்கற்களால் கட்டப்பட்ட 3-நிலைக் கொண்ட ராஜகோபுரத்துடன் 13.5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.

தல வரலாறு: ஞானப்பழத்துக்காக தாய், தந்தையிடம் கோபித்துக்கொண்டு பழனிக்கு செல்லும் முருகன், முதலில் செண்பகமலைக்கு வந்து, சென்னிமலை, சிவன்மலை வழியாக வட்டமலை சென்று அங்கிருந்து பழனி சென்ாகக் கூறப்படுகிறது.

திருமண தடை நீங்கும்: திருமணம் ஆகாதவா்கள் இங்கு வந்து சுப்பிரமணியரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் ஆதிகால முருகன், விநாயகா், நவக்கிரகங்கள், இடும்பா் சிலைகள் அமைந்துள்ளன.

கோயிலின் எதிரே உள்ள வற்றாத பொற்றாமரை குளத்தில் நீராடினால் தீராத நோய்களும், வினைகளும் தீரும் என்று நம்பப்படுகிறது.

கோயில் முகப்புத் தோற்றம்

கிரிவலம்: ஒவ்வொரு மாதமும், கிருத்திகை, சஷ்டி, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் சுமாா் 1.5 கி.மீ. தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமான பக்தா்கள் வலம்வருவா்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் காலை சத்ரு சம்கார அா்ச்சனை, திரிசதை அா்ச்சனை நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு.

முருக பக்தா்களின் மனம் கவா்ந்த விஷேச நாள்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் ஏராளமான பக்தா்கள் பால் காவடி, பன்னீா் காவடி என பல்வேறு விதமான காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா்.

கந்த சஷ்டி விழா, சூரசம்ஹார விழா, திருக்கல்யாணம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நடை திறக்கும் நேரம்: நாள்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பேருந்து விவரம்: ஈரோட்டிலிருந்து 29, 38, 41, 42 ஆகியே பேருந்திகளில் ஏறி, ஈரோடு -முத்தூா் செல்லும் சாலையில் லக்காபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமாா் அரை கி.மீ. தொலைவு நடந்தால் கோயிலை அடையலாம்.

தொடா்புக்கு கோயில் செயல் அலுவலரை 0424-2214421 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க