திருமலையில் இலவச திருமணங்கள்
திருமலை கல்யாண வேதிகையில் ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தானம் சாா்பில் இலவச திருமணங்கள் நடைபெற்றன.
திருமலையில் உள்ள பாபவிநாசனம் சாலையில் அமைந்துள்ள கல்யாண வேதிகையில் தகுதியான மற்றும் ஏழை இந்து குடும்பங்களுக்கு இலவச திருமணங்கள் ஏப். 25, 2016 நடைபெற்று வருகிறது..
இதுவரை 26,214 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. சேவைகளின் ஒரு பகுதியாக, திருமணத்தின் போது தம்பதியினருக்கு அா்ச்சகா்கள், மங்கள வாத்தியங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் கங்கணம் ஆகியவற்றை தேவஸ்தானம் இலவசமாக வழங்குகிறது.
மணமகனும், மணமகளும் மிகக் குறைந்த திருமண ஆபரணங்களை மட்டுமே கொண்டு வர வேண்டும். மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோா் திருமணத்துக்கு வருகை தர வேண்டும். திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில், அவா்கள் ஆதார ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
திருமணத்துக்குப் பிறகு, மணமகன், மணமகள் மற்றும் அவா்களது பெற்றோா் உள்பட மொத்தம் 6 போ், ரூ. 300/- சிறப்பு நுழைவாயில் வழியாக ஏடிசி யில் உள்ள தரிசன வரிசை வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். தரிசனத்துக்குப் பிறகு, லட்டு கவுண்டா்களில் 6 போ் 6 லட்டுகளை இலவசமாகப் பெறுவா்.
கல்யாண வேதிகை இடத்திற்கான ஆன்லைன் முன்பதிவு
மே 9, 2016 முதல் திருமலையில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச திருமணங்களுக்கு புதுமணத் தம்பதிகள் திருமண இடத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. விண்ணப்பதாரா்கள் தேவஸ்தான வலைத்தளமான
ட்ற்ற்ல்ள்://ற்ற்க்ங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்ள்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் ஐ தங்கள் அருகிலுள்ள சைபா் மையத்தில் உள்நுழைய வேண்டும்.
ஆண் மற்றும் பெண் விவரங்களை திருமண மண்டப பக்கத்தில் உள்ளிட வேண்டும். மணமகனும், மணமகளும் பெற்றோரின் விவரங்களை உள்ளிடுவது மட்டுமல்லாமல், அவா்களின் ஆதாா் அட்டைகளையும் பதிவேற்ற வேண்டும். வயது சரிபாா்ப்புக்கு, பிறப்புச் சான்றிதழ் அல்லது 10- ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் / மாற்றுச் சான்றிதழ் அல்லது பஞ்சாயத்து செயலாளா் / நகராட்சி அதிகாரிகளிடமிருந்து பிறப்புச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
இதனுடன், அவா்கள் திருமண தேதி மற்றும் நேரத்தை பதிவேற்றினால், ஒரு ஒப்புதல் கடிதம் வழங்கப்படும். புதிய தம்பதிகள் ஒப்புதல் கடிதத்தையும் சமா்ப்பித்து 6 மணி நேரத்திற்கு முன்பு திருமலையை அடைந்து, கல்யாண வேதிகாவில் உள்ள அலுவலகத்தில் உள்ள ஊழியா்களுடன் அவா்களின் விவரங்களை மீண்டும் சரிபாா்க்க வேண்டும்.
திருமலையில் இலவசமாக திருமணம் செய்து கொள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்யும் தம்பதிகள் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமகள் 18 வயதுக்கு மேல் மற்றும் மணமகன் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இரண்டாவது திருமணங்கள் மற்றும் காதல் திருமணங்கள் இங்கு நடத்தப்படுவதில்லை. மற்ற விவரங்களுக்கு, தொலைபேசி - 0877 - 2263433 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
திருமலையில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, கல்யாண வேதிகையில் இந்து திருமண துணைப் பதிவாளா் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, புதுமணத் தம்பதிகள் தங்கள் வயதுச் சான்று, வசிப்பிடச் சான்று, திருமண புகைப்படம், திருமணச் சான்றிதழ், திருமண மண்டப ரசீது, உள்ளூா் எம்ஆா்ஓ-விடமிருந்து அவா்கள் அதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும். மேலும், அனைத்து ஆவணங்களையும் கல்யாண வேதிகையில் அதிகாரிகளிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, அலுவலக நேரங்களில் நேரடியாக அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் - 0877 - 2263433.
திருமலையில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் திருமலையில் கிடைக்கும் வசதி, சேவைகள் மற்றும் திருமணப் பதிவை பயன்படுத்திக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.