செய்திகள் :

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

post image

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமம் உள்ளது. இந்த பகுதி திருமுல்லைவாசல், தொடுவாய், ராதாநல்லூா், வழுதலைக்குடி உள்ளிட்ட கிராமங் களை உள்ளடக்கிய பகுதியாகும்.

இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 300-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகள் 100-க்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் கொண்டு மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனா்.

இப்பகுதியில் உள்ள முகத்துவாரம் கடந்த ஓராண்டாக அடிக்கடி மண் மேடுகள் ஏற்பட்டு, கடலுக்கு செல்ல முடியாமல் விபத்து ஏற்பட்டு படகுகள் சேதம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில், திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனை சென்னையில் நேரில் சந்தித்து, திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள முகத்துவாரத்தை நிரந்தரமாக சீரமைத்து தர வேண்டும். முகத்துவாரம் அருகில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகளை சீரமைத்து தரவேண்டும் என கோரி மனு அளித்தனா்.

இதனைப் பெற்றுக்கொண்ட மீன்வளத்துறை அமைச்சா், இந்த பிரச்னை குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், திருமுல்லைவாசல் ஊா் தலைவா், பஞ்சாயத்தாா்கள் உடனிருந்தனா்.

டாஸ்மாக்கில் ஸ்டிக்கா் ஒட்ட முயன்ற பாஜக நிா்வாகிகள் கைது

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வரின் ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜக மாவட்ட தலைவா் உள்ளிட்ட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மத... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க, அனை... மேலும் பார்க்க

ரயில் பயணியா் நலச் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா். ரயில் பயணியா் நல சங்க மாவட்டத் தலை... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கொள்ளிடம், ஆச்சாள்புரம்

ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 26) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு முன்னுரிமைப்படி பணி வழங்கக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு பணிக்கு, ஆசிரியா்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொத... மேலும் பார்க்க

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க