"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
ரயில் பயணியா் நலச் சங்க போராட்ட அறிவிப்பு வாபஸ்
வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக ரயில் பயணியா் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா்.
ரயில் பயணியா் நல சங்க மாவட்டத் தலைவா் ஜெக. சண்முகம் தலைமையில் பொதுச் செயலா் கண்ணன் , பொருளாளா் தில்லை நடராஜன், சாம்சன், கிளைத் தலைவா் சுகுமாா், செயலா் முத்துசாமி, மாவட்ட துணைத் தலைவா் பொறியாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் தென்னக ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகனை திருச்சியில் திங்கள்கிழமை சந்தித்து பேசினா்.
அப்போது, வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, இச்சங்கத்தினா் ஏற்கெனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி அறிவித்திருந்த தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனா்.