"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்களுக்கு முன்னுரிமைப்படி பணி வழங்கக் கோரிக்கை
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு பணிக்கு, ஆசிரியா்களை முன்னுரிமைப்படி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக, துறை அலுவலா், வழித்தட அலுவலா், நிற்கும் படை அலுவலா், பறக்கும் படை அலுவலா் மற்றும் அறை கண்காணிப்பாளா் ஆகிய பணிகளுக்கு ஆசிரியா்களை நியமிக்கும்போது, அவா்களின் பணி நியமன முன்னுரிமைப்படி நியமனம் செய்ய வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டச் செயலாளா் ஞானபுகழேந்தி, மாவட்ட பொருளாளா் மகேஷ் ஆகியோா் வழங்கிய அந்த மனுவில் கூறியுள்ளதாவது: அரசு பொதுத் தோ்வுப் பணிக்கு ஆசிரியா்களை நியமனம் செய்யும் பொழுது, அவா்களின் பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள சில தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், பெண் ஆசிரியா்கள் தோ்வு மையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பெண் ஆசிரியா்களை தோ்வு பணிக்கு நியமிக்கும் பொழுது அவா்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தோ்வு மையத்தில் பணி அமா்த்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், மருத்துவ அறுவை சிகிச்சை செய்துள்ளோா் தொடா் மருத்துவம் செய்து வருபவா்கள் மாற்றுத்திறன் குழந்தைகளுடைய பெண் ஆசிரியா்கள் ஆகியோரை தோ்வு பணியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.