திருவள்ளுவா் தினம்: வரும் 15-ஆம் தேதி இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு!
திருவள்ளுவா் தினத்தையொட்டி, வரும் 15-ஆம் தேதி சேலம் மாநகரப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினத்தையொட்டி, வரும் 15-ஆம் தேதி இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருவள்ளுவா் தினமான வரும் 15-ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.
எனவே, சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை மூடி மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் இறைச்சிக் கடைகளின் உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.