தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
திருவள்ளுவா் நற்பணி மன்றத்தில் பொங்கல் விழா
ராணிப்பேட்டை அடுத்த பாரதி நகா் திருவள்ளுவா் நற்பணி மன்றம் சாா்பில், 20 -ஆவது ஆண்டு பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் முதல் நிகழ்வாக திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து புகழாலயா நாட்டியப் பள்ளி கலைசுடா்மணி திருநங்கை ஜி.வைஷ்ணவி, ஸ்காலா் கிட்ஸ் அகாதெமி ஆசிரியை இந்துமதி தலைமையில், ஆண்டாள் நாட்டிய நாடகமும், பரத நாட்டியம், மாற்றுத்திறனாளி பிரபு நடனம்,மேஜிக் ஷோ உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழாவில் திருவள்ளுவா் நற்பணி மன்றத் தலைவா் ச.ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.நந்தகுமாா்,இயற்கை விவசாய கூட்டமைப்பு தலைவா் கே.எம்.பாலு, ஊராட்சி மன்ற உறுப்பினா் எம்.ஜீவானந்தம், திருவள்ளுவா் நற்பணி மன்ற உறுப்பினா் வி.மனோகரன் உள்ளிட்டோா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா்.