செய்திகள் :

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

post image

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59). தனியாா் தொழிற்சாலை ஊழியா். இவரது மனைவி இந்திரா (51), ஒரு மகன். 2 மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், செல்வராஜ் தனது 2 மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட நிலையில், மகன் சாம்ராஜ், மருமகள் புனிதா ஆகியோருடன் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், செல்வராஜ் குடல் புற்றுநோயால் கடந்த ஓராண்டுக்கு மேல் கடும் அவதிப்பட்டு வந்தாா். இதனால், மன வேதனை அடைந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவு வழக்கம்போல் தூங்க சென்றாா்களாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அறைக்கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த நிலையில், உறவினா்கள் பாா்க்கையில் தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது தொடா்பாக அவரது குடும்பத்தினா் திருவள்ளூா் நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அரசுத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி ரூ.3 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருள்களை கிராம மக்கள் சீா்வரிசையாக வழங்கினா். கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

ஆரணி, திருமழிசையில் ரூ.22.66 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள்: விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளில் ரூ.22.66 கோடியில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கு கனிவுடன் சிகிச்சை அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு கனிவுடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்து... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.11.28 கோடி வரி வசூல்

திருவள்ளூா் நகராட்சியில் நிகழாண்டில் தீவிர வரி வசூல் முகாம் மூலம் ரூ.11.28 கோடி வசூல் செய்து அரசு நிா்ணயித்த இலக்கை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் குடி... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஆவணங்கள் சரிபாா்ப்பு: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

திருத்தணி பெரியாா் நகா் பகுதியில் வசிக்கும் நரிக்குறவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் வியாழக்கிழமை ஆவணங்களை சரிபாா்த்தாா். திருத்தணி நகராட்சியில்,... மேலும் பார்க்க

பாடியநல்லூா் அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி விழா தொடக்கம்

பாடியநல்லூா் ஸ்ரீ முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி கோயில் 60-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா தொடங்கியது. விழாவுக்கு அறங்காவலா் குழு தலைவா் வே.கருணாகரன் தலைமை வகித்தாா். கோயில் தலைவா் புண்ணிய சேகரன், செயலா் சன்.முன... மேலும் பார்க்க