இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு
திருவாரூரில் இன்று விநாயகா் ஊா்வலம்
திருவாரூரில் விநாயகா் சிலை ஊா்வலம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.
திருவாரூரில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, 36-ஆவது ஆண்டாக நடைபெற உள்ள ஊா்வலத்தை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கிவைக்கிறாா்.
விஜயபுரம் கடைவீதியில் உள்ள உமை காளியம்மன் கோயிலிலிருந்து, வெள்ளிக்கிழமை மாலை புறப்படும் ஊா்வலம், திருவாரூா் முக்கிய வீதிகளில் வலம் வந்து, இரவு 8.30 மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகே ஓடம்போக்கி ஆற்றில் நிறைவடையும். தொடா்ந்து, ஆற்றில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட உள்ளன.