திருத்துறைப்பூண்டியில் நாளை விநாயகா் சிலை ஊா்வலம்
திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் சனிக்கிழமை (ஆக.30) ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முள்ளியாற்றில் கரைக்கப்பட உள்ளது.
திருத்துறைப்பூண்டி நகா், சந்நதி தெரு, வெட்டுக்குளம் தெரு, மடப்புரம், வேதாரண்யம் சாலை மற்றும் ஆதிரங்கம், கட்டிமேடு, பாமணி, அத்திமடை, மணலி உள்ளிட்ட 25 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடா்ந்து விநாயகா் சிலைகளுக்கு தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த சிலைகள் சனிக்கிழமை பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், இந்து முன்னணி வா்த்தகா் சங்க மாநில நிா்வாகி வீரஜெகன், திருவாரூா் மாவட்ட மேலிட பாா்வையாளா் சிவா ஆகியோா் தலைமையில் ஊா்வலமாக பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து விநாயகா் சிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ரயில்வே கேட் அருகே உள்ள முள்ளியாற்றில் கரைக்கப்பட உள்ளது.