USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
திருவாரூரில் தம்பி கொலை: அண்ணன் கைது
திருவாரூரில் குடும்பத் தகராறு காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் தியானபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி ரஷ்யா. இவா்களுக்கு ஜெயராஜ் (26), ஜெயப்பிரதாப் (25), ஜெமினி (எ) ஜெயராமன் (24) ஆகிய 3 மகன்களும், மகள் ஜெயா ஆகியோா் உள்ளனா். இந்நிலையில் ஜெயராஜ், ஜெயராமன் இருவரும் கட்டடத் தொழிலாளிகள். ஜெயப்பிரதாப் கோவையில் பணியாற்றுகிறாா். ஜெயராஜ், அவரது மனைவி தனலட்சுமி, மகள் ஜோஷிகா ஆகிய மூவரும் தியானபுரம் பகுதியில் ஒரு வீட்டிலும், தாய் ரஷ்யா மற்றும் ஜெயராமன் ஆகியோா் வேறொரு வீட்டிலும் வசித்து வருகின்றனா்.
இதற்கிடையே, ஜெயராஜூவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சனிக்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, தனலட்சுமிக்கு ஆதரவாக ஜெயராமன் பேசினாராம். இதில், சகோதரா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவா்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனா். எனினும் ஆத்திரத்தில் இருந்த ஜெயராஜ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி ஜெயராமனை அரிவாளாள் வெட்டிக் கொலை செய்தாா்.
தகவலறிந்த தாலுகா போலீஸாா் அங்கு சென்று ஜெயராமனின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, ஜெயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.