செய்திகள் :

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மலம்; மது போதையில் அட்டூழியம்.. 4 பேரிடம் விசாரணை

post image

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்தநிலையில், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது. குழந்தைகள் குடிக்கிற தண்ணீரில் மலம் கலந்தவர்கள் மனித மிருகங்கள் என பலரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மலம் கலக்கப்பட்ட அரசுப்பள்ளி குடிநீர் தொட்டி

இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு அருகிலேயே வசிக்கும் நான்கு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதலில் நாங்கள் தான் செய்தோம் என சொன்னவர்கள் தற்போது மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த விவகாரம் நடந்திருப்பது கடும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.

மது போதையில் பள்ளியில் செய்த அட்டூழியம்

இது குறித்து காரியாங்குடி பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ஞாயிறு மாலை நான்கு இளைஞர்கள் பள்ளிக்குள் உடும்பு பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். பள்ளியில் உள்ள சமையலறை பூட்டை உடைத்து மளிகை பொருள்கள், பாத்திரம் எடுத்து சமைத்திருக்கிறார்கள். பின்னர் பள்ளி வளாகத்தில் மது குடித்துள்ளனர். மது போதையில் வாழை மரத்தில் முழு வாழை இலையை வெட்டி அதில் சமைத்த உடும்பு கறியை போட்டு சாப்பிட்டுள்ளனர்.

குடிநீர் தொட்டியில் மலம்

இதற்கிடையே போதை தலைக்கேறியவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் குடிநீர் தொட்டியின், பைப்பும் உடைந்து விட்டது. அதன் பிறகு நடந்தவை கொடுமையின் உச்சம். இரண்டு பேர் தனி தனியாக குடிநீர் தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்துவிட்டு அந்த தண்ணீரில் கழுவி உள்ளனர். சாவகாசமாக பள்ளியில் இதை செய்து விட்டு இரவானதும் வெளியே சென்று விட்டனர்.

நேற்று வழக்கம் போல் காலை உணவு சமைப்பதற்காக பள்ளிக்கு வந்த சமையலர்கள் பள்ளி வளாகம் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சுதாரித்தவர்கள் தண்ணீர் தொட்டியிலும் ஏறி பார்க்க மலம் கிடந்துள்ளது. குமட்டிகொண்டு வர அடப்பாவீங்களா இந்த காரியத்தை யார் செய்திருப்பார்கள் என புலம்பி கொண்டே எல்லோருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பிறகு நடந்த விசாரணையில் இவை தெரியவந்துள்ளது.

அரசுப்பள்ளி

நான்கு பேரிடம் விசாரணை

இது தொடர்பாக நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். திருவாரூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ரைட்டராக பணியாற்றுபவரின் இரு சகோதரர்கள் மற்றும் இருவர் என மொத்தம் நான்கு பேர் இந்த செயலை செய்திருப்பதாக தெரிய வருகிறது. முதலில் `நாங்கள் தான் செய்தோம்' என போலீஸில் ஒப்புக்கொண்டவர்கள் பின்னர் `நாங்கள் செய்ய வில்லை' என்றும் கூறி வருகிறார்கள். முதல்வரின் மாவட்டம் என்பதால் போலீஸ் இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகிறது.

பள்ளி இல்லாத நாள்களில் இது போல் அடிக்கடி மர்ம நபர்கள் பள்ளிக்குள் சென்று மது அருந்துவது வழக்கம். இதனை தடுக்கவில்லை என்றால் அசம்பாவிதம் ஏற்படும் என அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது குடிநீர் தொட்டிக்குள் மலம் கலக்கும் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர்.

ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்! - பின்னணி என்ன?

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச்... மேலும் பார்க்க

`டேங்கை மாற்றினால் போதுமா; குற்றவாளிகள்?’ - அரசுப் பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம்; குமுறும் மக்கள்

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவனை தாக்கி, பாலியல் தொல்லை - இளைஞர் கைது!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற இளைஞர் சேலத்தில் படுகொலை.. காவல் நிலையம் அருகே கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலைய... மேலும் பார்க்க

60 வயது முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசடி; ரூ.15 லட்சத்தை சுருட்டிய பூசாரி-நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோயில்வழி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்ப... மேலும் பார்க்க

நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி

மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியாபுதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல... மேலும் பார்க்க