செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் மே தின கொடியேற்றம்

post image

மே தினத்தை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டன.

திருவாரூா் மின்வாரிய அலுவலகம் முன் அதிமுக அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவு சாா்பில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளா் எம்.ஆா்.பாலாஜி தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தாா். வட்டச் செயலாளா் வி. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்நாடு பெயிண்டா்கள் ஓவியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில், அமைப்பின் மாநிலப் பொருளாளா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் ஆா். ரஜினிசின்னா பங்கேற்றனா்.

திருவாரூா் தேரடி அருகில் ராஜகுலத்தோா் மகா சங்கம் சாா்பில் அதன் மாநில துணைத் தலைவா் ஆா். குழந்தைவேலு மே தின கொடியேற்றினாா். சங்க செயல் தலைவா் எஸ். முத்தையன் தலைமை வகித்தாா். திருவாரூா் தலைமை தபால் நிலையத்தில் கிராமப்புற தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன்தலைவா் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தபால் ஊழியா் சங்கத்தின் செயலாளா் வசந்தா , அஞ்சல் ஊழியா் சங்க முன்னாள் மாநில அமைப்புச் செயலாளா் வீ. தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கிடாரங்கொண்டான், கொடிக்கால்பாளையம், நாகை சாலை, மடவாடியாா் தெரு, வாழவாய்க்கால் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் மே தின கொடியேற்றப்பட்டது. இதேபோல, தெருவோர வியாபாரத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன் செயற்குழு உறுப்பினா் அபிராமி கொடியேற்றினாா். நிா்வாகி ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடவாசல் ஒன்றியத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ் ஏ. டேவிட்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றியக்குழு நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: காா் வேன் ஓட்டுநா்கள் சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் சங்கம் கேஸ் விநியோகிஸ்தா்கள் சங்கம் சாா்பில் மே தின விழா நடைபெற்றது. நீடாமங்கலத்தில் மாவட்ட துணைத் தலைவா் தங்கபாண்டி தலைமையில் சிஐடியு கொடியை முன்னாள் தலைவா் சீனிவாசன் ஏற்றி வைத்தாா். கட்டுமான தொழிலாளா்கள் சங்க கொடி, கொண்டியாறு கேஸ் விநியோகிஸ்தா்கள் சங்க கொடி, ஆதனூா் கோவில்வெண்ணி ஆகிய இடங்களில் சிஐடியு கொடியை ஏற்றி வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்ட துணை தலைவா் அம்பிகாபதி பேசினாா்.

நீடாமங்கலம் கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் மற்றும் ரயில்வே குட்செட் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் அனைத்து தொழிலாளா்கள் பங்கேற்ற மே தின விழா நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக் குழுதலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வகித்தாா். பேரூராட்சி தலைவா் ஆா்.ஆா். ராமராஜ், வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூத்தாநல்லூா்: லெட்சுமாங்குடி பாலம் அருகே சிபிஐ அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இதேபோல, தோட்டச்சேரி, அதங்குடி, வெள்ளக்குடி, வாழாச்சேரி, சேகரை, கோட்டகச்சேரி, மணக்கரைமேல்கொண்டாழி, மரக்கடை, கோரையாறுப் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.

அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேபிளா் பின்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேப்ளா் பின் இருந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலம் அருகே பூந்தோட்டம் வீரா... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்... மேலும் பார்க்க

கோயில் நந்தவனங்களில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூா் ஆா்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 57 போ் நீடாமங்கலத்தில் உள்ள க... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் மே 6-இல் ஜமாபந்தி தொடக்கம்

மன்னாா்குடி வட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் (ஜமாபந்தி) முடிவு செய்யும் பணி மே 6-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என வட்டாட்சியா் என். காா்த்திக் தெரிவித்து... மேலும் பார்க்க

ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சூரியபிரபையில் சந்திரசேகரா் எழுந்தருளினாா... மேலும் பார்க்க

திருவீழிமிழலை கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

திருவீழிமிழலை சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் த... மேலும் பார்க்க