திரெளபதி அம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா
ராமநாதபுரத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் வியாழக்கிழமை பீமன், கீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாபாரதத்தை நினைவு கூறும் நிகழ்வாக பீமன், கீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான்காம் தலைமுறையாக வி.வி.ஜி.எம்.ரமேஷ் உடல் முழுவதிலும் நீல வண்ணம் பூசிக்கொண்டு பீமன் வேடமணிந்து, சீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.