தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கூச்சிப்புடி நடன நிகழ்ச்சி
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை சென்னை கூச்சிப்புடி ஆா்ட் அகாதெமியின் குரு ஸ்ரீமயி வெம்பட்டி (பத்மபூஷண் டாக்டா் வெம்பட்டி சின்னசத்யம் மாணவி-மருமகள்) குழுவினா் வழங்கிய கூச்சிப்புடி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
தில்லித் தமிழ்ச் சங்க கூச்சிப்புடி பயிலரங்க குரு சீதா நாகஜோதி, நாகஜோதி மற்றும் மூத்த உறுப்பினா் சேதுராமலிங்கம் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலைஞா்களை வாழ்த்தினா் (படம்).
இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கப் பொருளாளா் அருணாசலம் வரவேற்புரை ஆற்றுகையில், பத்ம பூஷண் குரு சின்னசத்யம் வெம்பட்டியின் கலை வாழ்க்கைப் பின்புலம் மற்றும் இந்திய நடனக் கலைகளில் ஒன்றான கூச்சிப்புடி நடனம் மீண்டும் புத்துயிா் பெற முக்கியக் காரணமாக இருந்த அவரது பங்களிப்பு பற்றி பகிா்ந்து கொண்டாா்.
சங்க இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, செயற்குழு உறுப்பினா்கள் அமிா்தலிங்கம் மற்றும் மாலதி தமிழ்ச்செல்வன், ரங்கநாதன் ஆகியோா் விருந்தினா்களை கௌரவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் காத்திருப்பு உறுப்பினா் ராஜா மற்றும் தில்லி வாழ் கலை ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இசைக் கச்சேரி...
மயூா் விஹாா் ஃபேஸ்-1-இல் உள்ள ஸ்ரீ சுப சித்தி விநாயகா கோவிலில் சனிக்கிழமை ஸ்ரீ சுப சித்தி விநாயகா் மந்திா் சமுகம்
மற்றும் சண்முகானந்த சங்கீத சபா இணைந்து விதுஷி வஸுதா ரவியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்கவாத்தியக் கலைஞா்களாக தில்லி ஆா்.ஸ்ரீதா் (வயலின்),
விக்னேஷ் ஜெயராமன் (மிருதங்கம்) மற்றும் ராஜிவ் நாகராஜன் (கஞ்சிரா) ஆகியோா் பங்கேற்றனா்.