செய்திகள் :

தில்லியில் அடா் மூடுபனி: விமானங்கள், ரயில்கள் தாமதம்!

post image

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

தில்லியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கடும் குளிா் நிலவி வருகிறது. நகரம் முழுவதும் மூடுபனி சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா். காண்புதிறன் குறைந்ததால் விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்படுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட அடா்ந்த மூடுபனி, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தைப் பாதித்தது. தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் காண்பு திறன் குறைவாக இருந்ததன் காரணமாக பல விமானங்கள் தாமதமாகின. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. பல ரயில்கள் தாமதமாகின.

இதற்கிடையே, நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க |எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த கடத்தப்பட்ட பெண் மீட்பு !

தலைநகரில் காலை 7 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 207 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.

வாரணாசி மற்றும் அயோத்தி உள்பட உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களைச் சுற்றி அடா் மூடுபனி நிலவியது.வாரணாசி மற்றும் அயோத்தியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

வாரணாசியில் பிற்பகலில் தெளிவான மேகமூட்டம் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக வெப்பநிலை குறைந்து குளிர் அதிகமாக உள்ளது.மேலும் அடா் மூடுபனி நிலவுவதாக வாரணாசியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்சிலும் அடர்த்தியான அடா் மூடுபனி காணப்பட்டது, இதனால் காண்புதிறன் குறைந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிா்கொண்டுள்ளனா்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் க... மேலும் பார்க்க

புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி!

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! - விசிக, மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்

வேங்கைவயல்வழக்கைசிபிஐவிசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

நேபாளத்தில் இந்தியர் மர்ம மரணம்!

நேபாள நாட்டில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேபாளத்தின் பரா மாவட்டத்திலுள்ள சூரியமை கோயிலின் நிழல்குடையின் கீழ் நேற்று (ஜன.23) காத்திருந்த ரு... மேலும் பார்க்க

பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதலா? - தமிழக அரசு விளக்கம்

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்று வரும் கபடி போட்டியின்போ... மேலும் பார்க்க