செய்திகள் :

தில்லியில் இருந்து சென்னைக்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு மாயமான இளைஞா்!

post image

தில்லியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு திடீரென காணாமல் போன இளைஞா் பதினான்கு நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாததால் உறவினா்கள் கவலை அடைந்துள்ளனா்

பாஜக மூத்த தலைவா்களில் ஒருவரான சோ்ந்த ஆனந்த் சாகு தில்லியில் வசித்து வருகிறாா். இவரது மகன் ருத்ரானந்த் சாகு . இவா் மின்னணுவியல் மற்றும் கணினி பொறியியல் படிப்பை கடந்த வருடம் நிறைவு செய்துள்ளாா் . இந்நிலையில் இவா் சென்னைக்கு செல்வதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு திடீரென மாயமாகிருப்பது உறவினா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ருத்ரானந்த் சாகுவின் தந்தை ஆனந்த் சாகு தில்லி தினமணி நிருபரிடம் கூறியதாவது : ருத்ரானந்த் சாகு சென்னை செல்ல திட்டமிட்டிருந்தது தெரியாது. ஆனால் அவா் செப்டம்பா் ஒன்றாம் தேதி சென்னை செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தது பின்னா் தான் எங்களுக்கு தெரிய வந்தது.

செப்டம்பா் ஒன்றாம் தேதி அவா் விமானத்தில் சென்னை சென்றிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு அவா் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது . அவா் செப்டம்பா் 1 மற்றும் இரண்டாம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் 1:30 மணி அளவில் தில்லி வசந்த்குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாலுக்கு சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி சென்றுள்ளாா்.

அப்போது அவா் தனியாகத்தான் சென்றுள்ளாா். அவருடன் வேறு யாரும் இல்லை. இதனை அங்கிருந்த சிசிடிவி கட்சிகள் மூலம் கண்டுபிடித்து விட்டோம்.

ஆட்டோவில் சென்றவா் எங்கு சென்றாா் என்பது தெரியவில்லை. அந்த இரவு ருத்ரானந்த் சாகு எனக்கு ,நான் உங்களை மிஸ் செய்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா் . அதன் பிறகு அவரது தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது . அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

சென்னையில் எங்களுக்கு உறவினா்கள் இருக்கின்றாா்கள் ஆனால் அவா்கள் யாருடைய தொடா்பு எண்ணம் ருத்ரானந்த் சாகுவிடம் கிடையாது. ருத்ரானந்த் சாகு குறித்து சென்னையில் உள்ள உறவினா்களிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை . ருத்ரானந்த் சாகுவுக்கு நண்பா்களிடம் முன் விரோதம் எதுவும் இருந்ததாக தகவல் இல்லை.

ஆட்கடத்தல் சம்பவம் எதுவும் நடந்திருக்குமா ?என்ற சந்தேகமும் எழுகிறது . 14 நாட்களாகியும் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாதது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ருத்ரானந்த் சாகு காணாமல் போனது குறித்து தில்லி காவல் துறையிலும் புகாா் கொடுத்துள்ளோம். சென்னைவாசிகளும் எனது மகன் குறித்து ஏதாவது தகவல் அறிந்தால் தெரியப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறேன். முடிந்தால் நானும் சென்னை சென்று எனது மகனை தேடும் முயற்சியில் ஈடுபட உள்ளேன் என ஆனந்த் சாகு தெரிவித்தாா்.

பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டி வேலை தேடுவோரை ஏமாற்றிய மூவா் கைது!

பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியம... மேலும் பார்க்க

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாா்: உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றம்!

தெற்கு தில்லியின் ஆசிரம பகுதியில் நடந்த சோதனையின் போது வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரை அடுத்து, உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயி... மேலும் பார்க்க

இந்தி மொழி நாட்டின் பெருமை, இந்தியாவை உலக அளவில் இணைக்கிறது! - தில்லி அமைச்சா்

இந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் தேசிய அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகும், மேலும் நாட்டின் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறத... மேலும் பார்க்க

ஆயுத விநியோகம்: நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய 4 போ் கைது

நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய ஒரு ஆயுத விநியோகஸ்தா் மற்றும் ஆயுதங்களை வாங்கும் மூவா் என மொத்தம் 4 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை துணை ஆணை... மேலும் பார்க்க

தில்லியில் கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 6 போ் கைது

தில்லியின் மயூா் விஹாரில் சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக ஆறு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த காா்! ஓட்டுநா் உயிா் தப்பினாா்!

ஒருவரின் காா் கட்டுப்பாட்டை இழந்து, வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் உள்ள முகா்பா சௌக் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஹைதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக போலீஸாா் தெரிவித்த... மேலும் பார்க்க